Header Ads



50 சதம் கூட கொள்ளையடிக்காதவர் கோட்டாபய, இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் தேட முடியாது


கோட்டாபய ராஜபக்ச 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் எனவும் அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் தேடிக்கொள்ள முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


நேற்று -18- இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் , முடிந்தவரையில் தற்போது மக்களை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளோம். உரம், சமையல் எரிவாயு, எரிபொருள் என்பன மக்களுக்கு கிடைக்கின்றது. ஆகவே எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை வழமைக்கு கொண்டு வந்து இந்த பயணத்தை முன்னெடுக்க முடியும்.


கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தாங்கள் மரிப்பதற்கு முன்பாவது அது குறித்து சிந்தித்து மனஸ்தாபப்படுவார்கள்.


அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களால் தேடிக்கொள்ள முடியாது. 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் தான் கோட்டாபய ராஜபக்ச.


அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஒரு தீவிரவாத செயற்பாட்டையும் நாங்கள் காணவில்லை. ஒன்றரை வருடத்தில் ஒரு போராட்டத்திற்கு கூட அவர் கண்ணீர் புகை பிரயோகிக்கவில்லை. தாக்குதல்களை நடாத்தவும் இல்லை.


ஒரு உண்மையானவருக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு இடமளிக்கவில்லை என்றே நான் கூறுவேன். அவர் அரசியலில் இருந்து விலகினார். மீண்டும் அரசிலுக்கு வருவதற்கான யோசனையும் அவருக்கு இல்லை.” என தெரிவித்துள்ளார். TW  

2 comments:

  1. மஹிந்தானந்த அளுத்கமகே என்ற பா.உ. உடனடியாக சபாநாயகர், மனநோய் வைத்தியசாலைக்கு அனுமதித்து பரிசோதனை செய்ய வேண்டும். இது போன்ற நபர்கள் பாராளுமன்றத்தில் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது. சாதாரண மனநிலையற்ற இவர்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் ஆபத்தானவர்கள்.

    ReplyDelete
  2. Mr. Aluthgamage, how do you know that Gothabaya Rajapakse did not rob even 50 cents from the Government funds? Does every one in the SLPP Govt. tell you how much they Rob every time they do so and are you keeping a Record of all the Amounts they tell you about?

    For God's sake STOP your Disgusting LIES and DON'T think that you can continue to fool the people as you did before.

    ReplyDelete

Powered by Blogger.