Header Ads



தொலைக்காட்சிக்கு வந்து, சுத்தப் பொய் சொன்ன அமைச்சர்


கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்துடன் தான் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றதாக மகிந்த அமரவீர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.


அதன் பிரசார செயலாளர் திசர குணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-


23.08.2022 அன்று இரவு, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘தீரனய’ என்ற அரசியல் நிகழ்ச்சியில், தற்போதைய அரசாங்கத்தில் மஹிந்த அமரவீர அமைச்சுப் பதவியை பெற்றிருப்பது தொடர்பில் மிகவும் தவறான கருத்து வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11, 2022 அன்று, நாங்கள் மத்திய குழுவில் நீண்ட விவாதம் செய்தோம், மேலும் நிமல் சிறிபாலவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர் பதவியை எமக்கு பெற முடியாது என்றும், அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றும் கூறினார். 2022 மே 24 அன்று கட்சியின் தலைவர் ஒரு தெளிவான செய்திக்குறிப்பை வெளியிட்டு, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை எடுப்பது கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு எதிரானது என்று கூறினார்.


இவ்வாறானதொரு சூழ்நிலையில் மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால ஆகியோருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் கிடைத்தமை கட்சியின் மத்திய குழுவில் இருந்த எமக்கு ஆச்சரியமான விடயமாக இருந்தது. 23.08.2022 இரவு சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சியில் அவர்கள் கட்சியின் மத்திய குழுவின் ஒப்புதலுடன் அமைச்சுப் பதவிகளைப் பெற்றார்கள் என தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் தவறான கருத்து. அமைச்சு பதவிகளை பெற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு கட்சியின் முடிவு என்று கூற முடியாது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.