Header Ads



இலங்கையின் பல மில்லியன் கணக்கான, மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்


இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி பல மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை வௌியிட்டுள்ளது. 


உணவுப் பாதுகாப்பை பேணவும் சமூக பாதுகாப்பு முறையை நிறுவுவதற்கும் நியாயமான வரி  விதிப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உயர் மட்ட ஊழலை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்புடைய நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தௌிவூட்டப்பட்டுள்ளது.


மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் கொழும்பில்  20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் 50  வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பணவீக்கத்தின் இரும்புக்கரம் கொண்டு  ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் இரு வேளை உணவிற்கே பழக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


5.7 மில்லியன் இலங்கையர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சனத்தொகையில் 22 வீதமான 4.9 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து இன்மையால் அவதியுறுவதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.