Header Ads



உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் - சர்வதேச மன்னிப்புச் சபை


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


தெற்காசியாசிய பிராந்திய காரியாலயம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.


அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சுமார் பத்துக்கு மேற்பட்டோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.


உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்த வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது.


அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசு எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


போராட்டக்காரர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பது மற்றும் பயங்கரவாதம் அல்லாத அவர்களின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படாத கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.