Header Ads



ரணிலைப் போன்ற ஒருவர் உலகில் இல்லை, அவர் தேசிய சொத்து, குப்பையில் தூக்கி எறிந்தது தப்பு


ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு கிராம், கிராமாக விநியோகம் செய்த கொள்கை அறிக்கையை மக்கள் அன்று குப்பையில் தூக்கி எறியாமல் இருந்திருந்தால், தற்போது நாடு இப்படி குப்பைக் கூடைக்குள் விழுந்திருக்காது என அந்த கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அன்று ஐக்கிய தேசியக் கட்சி விநியோகித்த கொள்கை அறிக்கையை மீண்டும் தெளிவான புத்தியுடன் வாசித்து பார்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மக்கள் தெளிந்த புத்தியுடன் செயற்பட்டிருந்த நாடு ஆசியாவில் உச்சத்தில் இருந்திருக்கும்

அன்று மக்கள் தெளிந்த புத்தியுடன் அதனை வாசித்து புரிந்துக்கொண்ட தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால், தற்போது ஆசியாவில் உச்சமான இடத்தில் இருந்திருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பிடக்கூடிய தலைவர் எவரும் உலகில் . அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால்,நாட்டை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதனால், ஜனாதிபதி மீதான நம்பிக்கை நொடி பொழுதில் அதிகரித்து வருகிறது.

ரணில் விக்ரமசிங்க தேசிய சொத்து, இலங்கையை ஆசியாவில் உயர்ந்த இடத்திற்கு தூக்கி வைப்பதற்காக அந்த தேசிய சொத்தை பிரயோசனப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளார். 

1 comment:

Powered by Blogger.