Header Ads



சகல பல்கலைக்கழங்களிலும் கஞ்சா புகைத்து, கசிப்பு பயன்படுத்துகின்றனர் - பலவந்தமாகவும் தங்கி உள்ளனர்




உயர் கல்வி அமைச்சராக தான் கடமையாற்றிய போது, பல்கலைக்கழகங்களுக்குள் இருந்த பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதம் மூலம் பதிலளித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


1967 ஆம் ஆண்டுக்கு பின் அமைச்சர்கள் எவரும் பல்கலைக்கழங்களுக்குள் சென்றதில்லை


1967 ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்வியமைச்சர் ஒருவர் பல்கலைக்கழங்களுக்கு சென்றதில்லை. அரச தலைவரும் சென்றதில்லை. ஆனால், நான் அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் சென்றேன். முதல் முறை சென்று சண்டையிட்டேன். அதனை நான் எதிர்கொண்டேன்.


அதன் பின்னர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் அழைத்துச் சென்றேன். பல்கலைக்கழகங்களின் நிலைமையை முற்றாக மாற்றினேன்.


இரவு நேரத்தில் 300 முதல் 400 பேர் பலவந்தமாக தங்கி இருக்கின்றனர்


பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை கொண்டு வந்தோம். எனினும் மீண்டும் பல்கலைக்கழகங்களில் பழைய நிலைமை ஏற்பட்டுள்ளது.


அனைத்து பல்கலைக்கழங்களிலும் 300 முதல் 400 பேர் இரவு நேரங்களில் தங்கி இருந்து கஞ்சா புகைத்து, கசிப்பு போன்றவற்றை பயன்படுத்தி பலவந்தமாக உள்ளே இருக்கின்றனர்.


பல்கலைக்கழங்களின் நிர்வாகிகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். உயர் கல்வியை கட்டியெழுப்புவதற்கு காலம் தேவைப்படுகிறது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.