Header Ads



வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள், மாதாந்தம் குறிப்பிட்ட டொலர்களை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயம்


சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டிலுள்ள வங்கி அமைப்பின்  மூலம் தமது பெயரில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெளிநாடு செல்லும் ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள், 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு 200 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.


மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. எந்த வகையிலும் சாத்தியமில்லாத ஒரு சட்டம். நாட்டுக்கு டொலர் கொண்டுவருவதற்கு நிதியமைச்சு கொண்டு வரும் இந்த சட்டம் எந்த வகையிலும் எந்தப் பிரயோசனமுமற்ற சட்டம். உலகின் பொருளாதார நிலைமைகள் பற்றிய எந்தப் பிரக்ஞையுமற்ற இந்த நிதியமைச்சரின் சட்டம் வலுவற்றது. தற்போது சர்வதேச மட்டத்தில் நடைபெறும் யுத்தங்கள், தோல்விடையந்த பொருளாதார செயற்பாடுகள், பொதுவான பொருளாதார மந்தம் காரணமாக அமெரிக்கா உற்பட பல்வேறு முதலாம் உலக நாடுகளில் மக்கள் தொழிலை இழந்து வருகின்றனர். சர்வதேச கம்பனிகள் தொடர்ந்த பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க, அவர்களின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பல சவால்களை எதிர்நோக்கும் போது இலங்கையில் இருந்து வௌியேறும் அரச ஊழியர்களுக்கு ஆயிரமாயிரம் டொலர்கள் கொடுத்து யார் தொழில்வழங்குவார்கள்? கிணற்றுத் தவளைகளுக்கு கிணறு பற்றிய அறிவு இருக்கும். வௌியுலகு பற்றித் தெரியாது. ஆட்சியில் இருக்கும் தவளைகளுக்கு கிணறு பற்றியோ, வௌியுலகு பற்றியோ எந்த அறிவும் ஞானமும் கிடையாது. உலகில் ஈடிஇணையற்ற நாடு இலங்கை!

    ReplyDelete

Powered by Blogger.