Header Ads



சீனாவுக்கு முடி வெட்டுதல் எளிதான காரியமல்ல


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு ( Nikkei Asia ) வழங்கிய பிரத்தியேக நேர்காணலில்  சீனாவுடன் உடன்பாட்டை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் . 

பொருளாதாரத்தில் திவாலாகிவிட்ட இலங்கையின் சார்பில் , நாட்டின் நிதிக் குழுவை வழிநடத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு , இது ஒரு வலிமையான சவாலாக அமைந்துள்ளது. 


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று புதிய சுற்றுக் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது . இந்தநிலையில் , ஏற்கனவே பெற்ற கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை , சீன அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க நிக்கேயிடம் கூறியுள்ளார் . 


சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்கு மத்தியில் சீனாவின் கடன் மறுசீரமைப்புக் காரணியே இலங்கையின் பொருளாதார அதிர்ஷ்டத்தை வடிவமைக்க உள்ளது என்பது யதார்த்தமான விடயமாகும் . இலங்கைக்கு பல பில்லியன் டொலர் பிணை எடுப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து , ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் , கருத்துக்களை வெளியிட்டுள்ளது . அதில் பிணை எடுப்புக்கு முன்னர் , கடனாளிகளின் போதுமான ' ஹெயார் கட் ' ( முடிவெட்டுதல் ) உத்தரவாதங்கள் அவசியம் என்று நிதியம் குறிப்பிட்டுள்ளது . 


(கடன் மறுசீரமைப்பை பொருளாதார ஆய்வாளர்கள் ' ஹெயார்கட் ' என்ற சொற்பதத்தை கொண்டு அழைக்கின்றனர் ) இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் கிட்டதட்ட 44 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்ற கடன்களாகும் . 


இலங்கையின் தற்போதைய நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டொலர்கள் ஆகும்.


தற்போது நாட்டில் 300 மில்லியன் டொலர்களே அந்நிய செலாவணியாக உள்ளன . இதனைக் கொண்டு , உணவு , எரிபொருள் மற்றும் மருந்து இறக்குமதிகளை மேற்கொள்ளமுடியாது

No comments

Powered by Blogger.