Header Ads



இது தவறான தகவல் - வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்



'புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் உப தலைவராக ஜனோசன்' என்ற தலைப்பில் 08.08.2022 அன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியாகிய  தகவல் குறித்து, யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் குறித்த தகவலை வட்சப் மூலமாக அனுப்பி வைத்து, அதனை பிரசுரிக்கும்படி வேண்டினார். எனவே ஜப்னா முஸ்லிம் அதனை பதிவேற்றியது.

எனினும் அதன்பின்னர், எமது சமூக சகோதரர்கள் எம்முடன் தொடர்புகொண்டு, குறித்த தலைப்பில் வெளியான தகவல் அல்லது செய்தி 2 வருடங்களுக்கு முற்பட்டது என்ற, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.

ஜப்னா முஸ்லிம் உண்மையை புரிந்து கொண்ட பின், வட்சப்பில் தகவல் அனுப்பிய அந்த சகோதரரிடம் ஊடக தர்மங்களின்படி விளக்கம் கோரியது. எனினும் அவர் குரல் பதிவில் அனுப்பிய அந்த பதிலையும், 'புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் உப தலைவராக ஜனோசன்' 2 வாரங்களுக்கு முன்தான் தெரிவு செய்யப்பட்டார் என்ற பதிலையும் முற்றாக நிராகரிக்கிறோம். (குறித்த சகோதரரின் ஒலி, எழுத்து ஆதாரம் உள்ளது)

ஜப்னா முஸ்லிம் இணையத்தை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பார்வையிடுபவர்கள் மிக அதிகம். சென்ற ஜுலை மாதம் கூட 38 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்) இது இணையத்தின் மீதான நம்பிக்கையாகும். தயவுசெய்து அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். தவறான தகவல் பரப்பி சமூகத்தை குழப்பாதீர்கள்.

உங்களின் குறித்த தகவலினால்தான் யாழ் - புத்தளம் உறவு வளர வேண்டுமென்ற எந்தத் தேவையும் இல்லை. உங்கள் குரல் பதிவில் இறுதியில் ஒருவர் எங்களை மிரட்டுவதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கொம்பனுக்கும் பயப்பட்டதில்லை. பயப்படப் போவதுமில்லை. கடந்த 12 வருடங்கள் சேறு பூசுதல், இட்டுக்கட்டுதல் போன்றவற்றை கடந்துதான் பயணிக்கிறோம்.

அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் இனியும் பயணிப்போம்.

தயவுசெய்து போலியான அல்லது தவறாக பேசுவதை தவிருங்கள். எமது ஊடகங்கத்தை அல்லது வேறு எந்த ஊடகத்தையும் தவறாக வழிநடத்தாதீர்கள்.

குறித்த 2 வருடங்களுக்கு முற்பட்ட பழைய தகவல் இதே...


 முஸ்லிம் விளையாட்டு கழகத்தின் வீரராகிய முனாஸ் ஜனோசன் அவர்கள் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் அவர் அளிக்கப்பட்ட 24 வாக்குகளின் 23 வாக்குகளைப் பெற்று இரண்டாவது நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கிடைத்த கௌரவம் ஆகும்.

வந்தாரை வாழவைக்கும் புத்தளத்து பூமி, எமக்கு வாழ இடமும் தந்து வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள சுதந்திரமான வழிகளையும் தந்து எம்மை வாழவைத்தது.

எனக்கு கை கொடுத்த அந்த மண், இன்று எமது மண்ணின் மைந்தன் ஜனோசன் அவர்களை உப தலைவர்களில் ஒருவராக ஆக்கி அழகு பார்த்துள்ளது எமது மக்களுக்கு கிடைத்த கௌரவம் ஆகும்.

ஜனோசன் அவர்கள் ஒஸ்மானியா கல்லூரி சார்பாகவும் புத்தளம் சாஹிரா கல்லூரி சார்பாகவும்  மெய்வள்ளுநர் போட்டிகள் உதைப்பந்தாட்ட போட்டிகளில்  பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளார், மேலும் யாழ் முஸ்லிம் அணியை புத்தளத்தில் பாதுகாத்த ஒரு நபர் ஆவார். 1992 ஆம் ஆண்டு முதல் யுனைடெட் அணியின் முக்கிய வீரராக விளையாடி வருகின்றார் முன்னாள் செயலாளர் மன்சூர் அவர்களின் மறைவுக்குப் பின்னர். முழுமையாக விளையாட்டுக் கழகத்தை வழிநடத்தி தனிநபராக நின்று பாதுகாத்த மனிதர் ஜனோசன் ஆவார். இவரை உப தலைவராக  தெரிவு செய்த புத்தளம் லீக்குக்கு மற்றும் புத்தள மக்களுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்


No comments

Powered by Blogger.