Header Ads

ரணிலுடனான தொலைபேசி உரையாடலை அடுத்து, கோட்டாபயவின் இலங்கை வருகை ஒத்திவைப்பு..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, கோட்டாபயவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.


மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.


கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.


இந்நிலையில் கோட்டாபய சிங்கப்பூரில் ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தார். பின்னர் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார். 


கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டது. 


ஆனால் தற்போது எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருக்கிய தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.  TW


1 comment:

  1. 2022 மார்ச் மாதம் முதல் ஆர் 2 ஆர் மேற்கத்திய குழு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐங்கோவின் கும்பலின் அங்கத்தினர்களான குண்டர்கள் மற்றும் ரவுடிகள், அரசியல் சதிகாரர்கள் மற்றும் ஆர்2 ஆர் 2 ஆர் மேற்கத்திய குழு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐங்கோவின் கும்பலின் உறுப்பினர்களை விட இலங்கை மக்களிடமிருந்து இதைவிட அதிகமான தகுதியை கோட்டா பெற்றுள்ளார். "சிங்கள மக்களுக்கும்" "சிறுபான்மையினருக்கும்" இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசை அது என்னவாக இருக்க வேண்டும் என்று அவர் அழைத்த ஒரு நாட்டையும் தேசத்தையும் அது என்னவாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார் - அவர்களுக்கு ஒரு "சோசலிச பெளத்த அரசு" என்று அவர் உரிமை கொண்டாடினார். மற்றும் 2006 ஜூலையில் இருந்து 2009 மே மாதம் வரையான 3 வருட காலப்பகுதிக்குள் மாவிலாறு முதல் நந்திக்கடல் வரையான ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்பை கோத்தாவும் அந்த தேசபக்த சக்திகளும் அவர்களது ஆதரவாளர்களும் மே 2009ல் தோற்கடிக்காமல் இருந்திருந்தால், அதனை பிளவுபடுத்தி 2 அரசுகளை உருவாக்கிய மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகளின் கைப்பாவை அரசாக "இல்லை". கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணியின் செயலூக்கமிக்க மற்றும் லாபி குழுக்கள் மற்றும் ஒரு சில அர்ப்பணிப்புள்ள சிங்கள "தேசபக்தர்கள்" மற்றும் 3 அல்லது 4 உறுப்பினர்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பது
    இன்று தங்களுக்காக. எனவே கோட்டா இதை விட அதிகமாக தகுதியானவர். கோதா தப்பி ஓடவில்லை, அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது. அவர் "பாதுகாப்புக்காக" சென்றார்.
    Noor Nizam - நூர் நிஜாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆராய்ச்சியாளர், எஸ்.எல்.பி.பி. ஸ்டால்ட்வார்ட், கன்வீனர் "முஸ்லிம் குரல்", தேசபக்த குடிமகன்.

    ReplyDelete

Powered by Blogger.