Header Ads



ஆளுநர்களாக தயா, ஜோன், நவீனை நியமிக்க ரணில் திட்டம் - பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு


-TM-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், குளிர்கால யுத்தமொன்று இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.


மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின்  பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


எனினும், கடந்த ஆட்சியின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்களை மாற்றவேண்டாம் என்று பெரமுன வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்தே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் தோற்றியுள்ளன என அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.