Header Ads



'எங்கே தவறு செய்தோம்' என ஆராய்ந்த பொதுஜன பெரமுன - கண்டுபிடிக்கப்பட்ட 6 தவறுகள்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகளின் தலைவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சந்திப்பொன்றை  நடத்தியது.


எதிர்கால நடவடிக்கைகளுக்காக கட்சியை ஒழுங்கமைக்கும் முகமாக இச்சந்திப்பு நடத்தப்பட்டது.


சந்திப்பின் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது . இச்சந்திப்பின் போது திரையில் ‘எங்கே தவறு செய்தோம்’ என்ற தலைப்பில் 5 விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 69 இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கமும் இருந்த போதிலும் பொதுஜன பெரமுன செய்த தவறுகள் என்ன என்று இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.


1, இரசாயன உரப் பிரச்சினை, 


2, அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பை கைவிட்ட சில அமைச்சர்கள், 


3, அரசு என்ற முறையில் போராட்டம் நடத்துவது பற்றிய புரிதலின்மை, 


4, மார்ச் 31 மிரிஹான தாக்குதலுக்குப் பிறகு அமைச்சரவை விலகல், 


5, பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை, 


6, ஜனாதிபதியின் இராஜினாமா, 


போன்ற விடயங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.