Header Ads



20 வீத குழந்தைகள் எடை குறைந்தன - ஊட்டச்சத்தை வழங்காவிட்டால் வருங்கால சந்ததி பேரழிவைச் சந்திக்குமென எச்சரிக்கை


சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் கடந்த சில மாதங்களில் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

இந்நிலையை உடனடியாகத் தடுக்க, குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் வருங்கால சந்ததியினர் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலை தொடருமானால் அவர்களின் வயதுக்கேற்ற எடை குறைவாகவுள்ள குழந்தைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயதுக்கேற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தையாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்

No comments

Powered by Blogger.