Header Ads



அரசியலில் முக்கிய திருப்பம் - சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ கிரியெல்ல தலைமையில் குழு - JVP தவிர்ந்த கட்சிகள் ஆதரவு


அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், எதிரணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிரணி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பி;னர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

எனினும், ஜே.வி.பி இந்தக் கூட்டத்தில் பற்கேற்றிருக்கவில்லை.

இன்றைய கூட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பல்வேறு தரப்பினரும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளர். 

அனைத்து விடயங்களையும் ஒன்றிணைத்து, ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவர் பிரதமராக வந்தாலும் தங்களுக்கு பிரச்சினை இல்லை. முழுமையான தேசிய ஒருமைப்பாட்டுடனான வேலைத்திட்டத்திற்கு, முதலில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில், தற்போதைய அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய இயலுமை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.