Header Ads

டளஸ் அழகப்பெரும இனவாதியா..? ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரின் வாக்குமூலம்டலஸ் அழகப்பெரும கடைசியாக ஊடக அமைச்சராக இருந்து அவா் இறுதியாகக் கலந்து கொண்ட நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடாகும். அந்நிகழ்வில் அவா் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தாா்.

அவா் அழகான உரையொன்றை அங்கு நிகழ்த்தினாா். அதில் அவா் நான் ஒர் ஊடகவியலாளன். பத்திரிகையாளான் அதே போன்று நான் ஊடக அமைச்சராக இந்த அமைச்சினைப் பாரமெடுத்த பிறகு எந்த ஒர் ஊடகவியலாலனுக்கும் அநீதி இடம்பெற அனுமதிக்க மாட்டேன் என்றாா்.

நான் அமைச்சினை பாரமெடுத்து அடுத்த நாளே இ.ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் கல்விச் சேவைக்காக முஸ்லிம் சேவையை இல்லாமல் செய்ய பாா்த்தார்கள் அதனால் அச் சேவை ஒரு நாள் இயங்கவில்லை அதனை உடன் ஆரம்பித்தேன் ருபாவாகினி தொலைக்காட்சிச் சேவையில் தமிழ்ப் பிரிவுக்கு இதுவரை காலமும் ஓர் சிங்களவரே பணிப்பாளராக இருந்தாா். தமிழ் தெரியாதவா் எவ்வாறு அதற்கு பணிப்பாளா் இருக்க முடியும் என தமிழ் பேசும் ஒருவரை நியமித்தேன் என பல்வேறு விடயங்களை அவா் அங்கு உரையாற்றினாா்.

அவா் பேசி முடிந்து ஆசனத்தில் அமர்ந்ததும் நான் மேடையில் ஏறி அவரிடம் சென்று எனக்கு நடைபெற்ற அநீதியை தெரிவித்தேன். அவர் உடன் எனது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் அவரது டயரியில் குறித்துக் கொண்டாா். அத்துடன் ஒரு பேப்பரில் விபரங்களை எழுதிக் கேட்டாா். அவ்விடத்திலேயே ஒரு பேப்ரில் எழுதிக் கொடுத்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஜ.ரீ.என். இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.. அமைச்சர் மிகவும் காரசாரமாக குறிப்பு எழுதியுள்ளாா். கடந்த ஒன்றரை வருடமாக உங்களுக்கு செய்தி கவரேஜ் தராமல் விட்டது பிழையான தகவல்கள் -பெற்றிருந்தேன் என அந்த அதிகாரி தெரிவித்து உடன் இன்றிலிருந்து மீள ஒப்பந்தம் கையெழுத்திட்டு பழைய மாதிரி தங்களது ஜ.ரி.என். வசந்தம் செய்தியளராக கொழும்பு மாவட்டத்தில் பணியை தொடருங்கள் என அதிகாரி எண்னைப் பணித்தாா். வசந்தம் தொலைக்காட்சி சித்தீக் ஹனிபா, இளங்கோவும் உடன் இருந்தாா்கள்.

அப்போது தான் யோசித்தேன் சில அமைச்சா்களிடம் கையில் கடிதங்கள் கொடுத்தால் அதனை வாசிக்க மாட்டாா்கள் மறந்து விடுவாா்கள். ஆனால் இந்த அமைச்சர் அதனை கவணமாக எடுத்து குறிப்பு எழுதி இவருக்கு ஏன் நீங்கள் இடை நிறுத்தினீா்கள் நிறுத்தியமைக்கான காரணமோ கடிதமோ அனுப்பவில்லை ஏன் ? என விளக்கம் கேட்டு இருந்தாா் அவா் உடனடி நடவடிக்கை எடுத்து எனக்கு மீள ஜ.ரீ.என் செய்தியாளராக பணி கிடைக்க வழி வகுத்தாா் 

Ashraff A Samad


2 comments:

 1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் "அரித்மெட்டிக்" வாக்குகளை ரணிலுக்கு வேலை செய்ய வைக்கும் அரசியல் விளையாட்டுகள் இவை.
  ரணிலை எதிர்க்கும் இந்த முட்டாள்தனமான கட்சித் தலைவர்களுக்கு "அரசியல் ஜனநாயக யதார்த்தங்கள்" புரியவில்லையா?
  என் கருத்துப்படி, இவை அனைத்தும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான அரசியல் நாடகங்கள்.
  "போட்டி" இல்லாமல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரணில் ஜனாதிபதியாக பதவியேற்க அனுமதிப்பதுதான் சிறந்தது. இந்த கருத்தை ஊடகங்கள் வெளியிடாது என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இன்னும் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் நம்புகிறேன்.
  ரணிலை எதிர்க்கும் அனைத்துக் குழுக்களும் தங்கள் குழுவின் நீலக்கண்ணு வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது, ​​நாளை ரணில் மிக எளிதாக வெற்றி பெறுவார். அதுதான் யதார்த்தமாக இருக்கும். எனது 53 வருட அரசியல் ஈடுபாடு மற்றும் அனுபவம் மற்றும் ஸ்ரீ.ல.சு.க./ஸ்.பொ.க.வின் முக்கியஸ்தர் மற்றும் மறைந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க, உறுப்பினர் - சுது நெலும் (சந்திரிகா) மற்றும் மஹிந்த (பிரச்சார ஆர்வலர் மற்றும் மூத்த பணியாளர், செய்தித் தொடர்பாளர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி. செயலகம்), ஒரு அரசியல் தொடர்பு ஆய்வாளராக, முழுப் பொறுப்புடன் இந்த அறிக்கை/கருத்தை வெளியிடுகிறேன்.
  Noor Nizam - நூர் நிசாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், அழைப்பாளர் "முஸ்லிம் குரல், தேசப்பற்றுள்ள குடிமகன்.

  ReplyDelete
 2. These are just political games to make the "ARITHMETIC" of votes work for Ranil with the support of the SLPP.
  Are these idiotic Party Leaders opposing Ranil not understanding "political democratic realities".
  In my opinion, these are all political dramas for the Media and press.
  The best is to allow Ranil take over as President for the next 3 years without a "CONTEST". I know that media will not publish this comment, but I still believe in the freedom of expression and opinion.
  When all the groups opposing Ranil will vote their group blue-eyed candidate, RANIL will win very comfortably tomorrow. That will be the reality. With my 53 years of political engagement and experience and having being an SLFP/SLPP stalwart and an inner confidant of late Mrs. Sirimavo Bandaranaike, Member - Sudu Nelum (Chandrika) and Mahinda (Campaign activist and Senior Personnel, Office of the Spokesperson, Presidential Secretariat), as a political communications researcher, I am making this statement/comment with full responsibility.
  Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice, Patriotic Citizen.

  ReplyDelete

Powered by Blogger.