Header Ads

காலையில் எழுந்து சமுக ஊடகங்களில் அவதுாறு செய்வதை நிறுத்துங்கள் - நசீர் அஹமட்


 (அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள் இன்று 31.07.2022 கொழும்பு 13 சிவப்பு பள்ளிவாசலில் நடைபெற்றது

இந் நிகழ்வுக்கு   கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், மற்றும் அல் ஜாமிஉல் அல்பர் சிவப்பு பள்ளிவாசலின் நிர்வாகமும் இணைந்து இந் நிகழ்வினை நடாத்தியது.   . இந் நிகழ்வுகள்  முஸ்லிம் சயம பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா், இப்ராஹிம் அன்சாா் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெத்தம் மற்றும் மத விவகாரம் மற்றும்  கலாச்சார அலுவல்கள் அமைச்சா் விதுர விக்கிரமநாய்ககவும்  சுற்றாடல்த்துறை அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமடும் கலந்து சிறப்பித்தனர்  . அத்துடன் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன பிரநிதிகள்,  கொம்பனி வீதி அகதியா பாடசாலை மாணவா்கள், பள்ளிவாசல்கள் நிர்வாக உறுப்பிணா்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா். அத்துடன்  பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஆத்தின் ஹதீப் மாா்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு  அமான தக்கபுல் காப்புறுதித் திட்டமொன்றும்  அமைச்சரிடம் இந் நிறுவனத்தின் அஷ்ஷேக் நவாஸினால்  கையளிக்க்படப்டது.

இக் காப்புறுதித் திட்டத்தில் முஆத்தின் மாா்கள் ஹதீப்மாா்கள்  கிட்டினி, இருதய நோய்களினால் பீடிக்கப்பட்டு இறப்போறுக்கு  அவரது குடும்பத்திற்கு 10 இலட்சம் ருபாவும், புற்றுநோயினால் பீடிக்கப்டப்டடிருக்கும் நோயளிகளுக்கு  4 இலட்சமும் ருபாவும்  வழங்குவதற்கு முஸ்லிம் சமய திணைக்களமும்  அமான காப்புறுதியும் இணைந்து இத் திட்டமொன்றை  இந் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் கொம்பனி வீதியில் உள்ள அகதியா மாணவா்களது கஜீதா பேச்சுக்களும்  இடம் பெற்றன.

பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினல் பிரதம அதிதிகளுக்கு பொன்னாடை போற்றி திருக்குர் ஆன் மொழிபெயா்ப்பும் ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.முகா்ரம் பற்றி சிறப்புப் பேச்சினை அஷ்ஷேக் மொஹமட் பக்கீனுடீன் நிகழ்த்தினாா். துஆப்பிராத்தனையும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய  அமைச்சா் நசீர் அஹமட் தெரிவித்தாவது

இந் நாட்டில் நாம் இனங்களுக்கிடையே ஒன்றுமையாக நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். நான் 11 வயதில் இப் பளிள்வாசலில் தராவிஹ் தொழும் போது  எனக்கு குர் ஆனை திருத்தமாக நான் ஓதிய வசனங்களை இங்கு இருந்த ஹதீப் எனக்கு திருத்தமாகச் சொல்லித் தந்தாா்.  

தற்காலத்தில் நாம் காலையில் எழுந்தவுடன்  சமுக வலைத் தளங்கள் ஊடாக  ஏனையவரைப்பற்றி புறம் பேசுவதும்,கொட்ட வாா்த்தைப் பிரயோகம் செய்வது போன்ற வற்றிலேயே நம்மவா்கள் காலத்தை கழிக்கின்றனர். இதற்கு நமது மாா்க்கத்தில்ஒரு மனிதனுக்கு அவதுாறு செய்வதை இன்னும் மொறு மனிதனின் பினத்தினை உண்பதற்குச் சமன்னாகும்.     ஆகவே தான் முஸ்லிம்களாகிய நாம் நமது காலங்களையும் நேரங்களையும்  நமது மார்க்கமான குர்ஆணை ஓதுவது நமது நாட்டுக்காகவும் நமது எதிா்கால வாழ்விற்காகவும் பிராத்தனை செய்வது சாலச் சிறந்தாகும்.

இலங்கையில் இன்றைய காலகட்டத்தில்  நாம் பாரிய கஸ்டத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே நாம் வீனான விடயங்கள் நாட்டிற்கு பங்கம் விளைக்கும் செயல்களில்  ஈடுபடக் கூடாது. இந்தப் சிவப்புப் பள்ளிவாசல்கள் நமது முன்னோா்கள் வியாபாரத்துறையில் ஈடுபட்டு இந்த நாட்டுக்கு நன்மையை செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே நமது நாட்டின் ஸ்திரமற்ற பொருளாரத்தினைக்  கட்டியெழுப்புவதற்கு நாம் நமது உதவிகள் ஒத்தாசைகளை வழங்கல் வேண்டும்.  நமது நாட்டுக்கு உதவுவதற்கு  தற்போதைய ஜனாதிபதி மட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள், யப்பான் சீனா இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுடன் நாம் பேச்சுவாா்த்தியில் ஈடுபட்டு வருகின்றாா்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சர்வகட்சி ஆட்சிமுறையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிா்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்கள். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள பொருப்பு இந்த நாட்டினை கட்டியெழுப்வுதாகவும். 

  அமைச்சா் விதுர விக்கிரமநாய்கக அவா்கள் இம்முறை ஹஜ் பிரயாணத்திற்கு இல்ஙகை முஸ்லிம்களுக்கு எவ்வித தடையுமின்றி உதவினாா்.  இலங்கை அரச செலவில் யாரும் ஹஜ் பயணம் இம்முறை மேற்கொள்ளவில்லை. நானும் கூட எனது சொந்தச் செலவிலேயே ஹஜ் பயணம் மேற்கொண்டேன் எனவும் நசீர் அஹமட்  அங்கு உரையாற்றினாா்

1 comment:

 1. "தற்காலத்தில் நாம் காலையில் எழுந்தவுடன் சமுக வலைத் தளங்கள் ஊடாக ஏனையவரைப்பற்றி புறம் பேசுவதும்,கொட்ட வாா்த்தைப் பிரயோகம் செய்வது போன்ற வற்றிலேயே நம்மவா்கள் காலத்தை கழிக்கின்றனர்."

  You are Hurt because the posts in the Social Media you are referring to are about you, right? Are these posts about you wrong?

  If any post about you is Wrong, why don't you rebut such post specifically without blaming All who make the posts?

  You know the WORST CRIME you and another half a dozen or so other MPs committed for which the Country as a whole is paying? That is to vote for the 20th Amendment. And that too when the Janazas of Muslims were being Maliciously and Inhumanly Cremated in spite of Objections from Not Only the Muslim world but also several Independent Organisations including the W.H.O. But the Dumb, Greedy and Selfish MPs like you not only kept Mum but went so far as to give More powers to the Oppressor by voting for the 20A. Even Worse, you have NO Remorse or any sense of Shame but are Blaming the people who point out your Evil Misdeeds.

  You have memorised the Holy Quran but do you practice the Teachings in the Holy Quran? If so, why did you go to justify the cremation of Janazas by your disgusting and ridiculous claim that it is only the wooden coffin that is burnt and Not the janazas?

  Man, you have a lot to answer because of your Craving for the Duniya and Disregard for the Aakhirah. You seem to have forgotten that ALL those Near and Dear ones of those who were Cremated will be pointing their fingers at you in front of Allah (Swt) on the Day of Judgement.  ReplyDelete

Powered by Blogger.