Header Ads



எரிபொருளை பெற முன்வைக்கும் விலைமனுக்களை பெற, எந்த விநியோகஸ்தரும் முன்வருகிறார்கள் இல்லை


 தனது அமைச்சை மிக சிறப்பாக செய்யக் கூடிய எவராவது இருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை கடனை திரும்ப செலுத்தாத நாடு என அறிவிக்கப்பட்டுள்ளதால், எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மிகவும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் போது, வெளிநாட்டு வங்கி ஒன்றின் உறுதிப்பத்திரத்தை பல விநியோகஸ்தர்கள் கோருகின்றனர்.

அத்துடன் இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்வைக்கும் விலைமனுக்களை பெற எந்த விநியோகஸ்தரும் முன்வராத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

அதேவேளை எரிபெருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தினால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்க தயாராக இருக்கின்றது.

மாதந்தோறும் அவ்வாறு எரிபொருளை வழங்குவது சிரமம் என்றாலும் வாரந்தோறும் வழங்க முடியும். நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைக்கு தேவையான எரிபொருளுக்காக டொலர்களில் பணத்தை செலுத்த முடியும் விதத்தில் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புக்கொண்டு அந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதன் பின்னர் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.எரிபொருளை கூடியளவில் முகாமைத்துவம் செய்து விநியோகிக்க எண்ணியுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்கள் சம்பந்தமாக வருதத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.