Header Ads



பொதுவான முடிவிற்கு வர முடியாவிட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை


 வெற்றிடமாகியுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று தமது நிலைப்பாட்டை அறிவித்தது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

ஜனநாயகத்திற்கு உட்பட்ட விதத்தில் அரசியல் அமைப்பிற்கு அமைவாக ஒரு வேட்பாளர் முன் மொழியப்பட்டு, அவர் தமது வேலைத்திட்டம் தொடர்பில் தௌிவான ஒரு கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவ்வாறான ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதில் இருந்து மீட்பதற்கும் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் எரிவாயு , உரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் அவரின் வேலைத்திட்டத்தினை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அவ்வாறு இல்லாமல், பல வேட்பாளர்கள் முன்மொழியப்படுவார்கள் எனில், அவர்கள் தங்களுக்கிடையில் கலந்துரையாடி, நாடு மற்றும் மக்கள் தொடர்பில் தீர்மானித்து, ஒரு பொதுவான முடிவிற்கு வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுவான முடிவிற்கு வர முடியாவிட்டால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில், எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனவும் வாக்களிப்பில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

1 comment:

  1. At this moment Hon. M. Sirisena is the suitable candidate for the Presidentship, I think...

    ReplyDelete

Powered by Blogger.