Header Ads



விமான நிலையங்களும் பாதிப்பு, எரிபொருளை கொண்டு வருமாறு அறிவிப்பு


தற்போதைய சூழ்நிலையால் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே தற்போது பணிக்கு அழைக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, தெரிவித்துள்ளார்.

நாட்டின் விமான எரிபொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இலங்கை வருவதற்கும் புறப்படுவதற்கும் எரிபொருளை கொண்டு வருமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

இத்தகைய பின்னணியில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிலை என்ன என்பதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் சிறிய அளவிலான எரிபொருள் மாத்திரமே கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரிபொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TW

No comments

Powered by Blogger.