Header Ads



அடுத்தடுத்து நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்


இந்த வாரத்தில், மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (11) தெரிவித்தார்.

அதற்கமைய,  நாளை (12) முதல் 15ஆம் திகதிக்கு இடையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதிக்கு இடையில் கனரக எண்ணெய்க் கப்பலும், இம்மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடையில் மசகு எண்ணெய்க் கப்பலும் வந்து சேரும் என்றார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலமே இவ்விடயத்தை அவர் அறிவித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் லங்கா ஐ.ஓ.சி.க்கு கடந்த வெள்ளிக்கிழமை முழுமையான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, ஜூலை 15 மற்றும் 17 க்கு இடையில் டீசல் தொகுதியும் ஜூலை 22 மற்றும் 24 க்கு இடையில் பெற்றோல் தொகுதியும் நாட்டை வந்தடையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடையில் வரவுள்ள டீசலுக்கும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதிக்குள் வருகைதரவுள்ள பெற்றோலுக்கும் கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்டதாகவும் டீசலுக்கான மிகுதித் தொகை இன்று (11) வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஜூலை 9 ஆம் திகதி வருகைதர இருந்த டீசல் தொகுதி சீரற்ற வானிலை காரணமாக தாமதமானதாகவும் குறிப்பிட்ட அவர், இன்று (11) காலை இந்தியாவிலிருந்து எரிபொருள்  புறப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜூலை 12 முதல் 15ஆம் திகதிக்குள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.