Header Ads



ரணிலை நம்ப முடியாது - மரிக்கார்


 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

நாட்டை அமைதிப்படுத்தும் வகையில்,ஐக்கிய மக்கள் சக்தி இந்நேரத்தில் சர்வ கட்சி ஆட்சியை அமைக்க தயாராக உள்ளது. இன்று, ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை, அதனால் அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார், எனவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என்பதால் அவர் பதவி விலக ஒப்புக்கொண்டார். அவ்வாறு அவர் வெளியேறும் போது, ​​மக்கள் ஆணையை இழக்கும் போது, ​​ஜனாதிபதி நியமித்த பிரதமரும் மக்களால் நிராகரிக்கப்படுகிறார்,

எனவே பிரதமரும் வலுவற்ற நிலையை அடைவதால் அவரும் பதவி விலகவேண்டும். கோட்டா, ரணில் இருவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றே மக்கள் கோரினர், கோட்டா மட்டுமே செல்ல வேண்டும் என்று மக்கள் கோரவில்லை என்று நாங்கள் தெளிவாக கூறுகிறோம். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகளால் வெற்றி பெறாத ஒருவரால் இவ்வாறு நடத்த முடியாது.எனவே இந்த நெருக்கடியை அதிகரிக்காமல் உடனடியாக பிரதமர் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாடு சீர்குலையும் என அவர் கூறுகிறார்.அவ்வாறு முடியாது, ஜனாதிபதி, பிரதமர் இருவரும் பதவி விலகினால் சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என அரசியலமைப்பில் தெளிவான விதிமுறைகள் உள்ளது.பொய் கூற வேண்டாம்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர் பிரதமர் பதவியை பிடித்துக் கொள்ள முயல்வது வேறு எதற்கும் அல்ல,தனது வாழ் நாளில் ஒரு நாளும் செய்ய முடியாத ஜனாதிபதி பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற தந்திரத்தையே  பிரதமர் வகுத்து வருகிறார். எனவே அரசியலமைப்பின் படி அவர் வெளியேறியதால் நாடு மேலும் அராஜகமாகிவிடாது. அரசியலமைப்பின் பிரகராம் எந்தப் பிரச்சினையும் இல்லை.எனவே கட்சித் தலைவர்கள் எடுத்த தீர்மானத்துக்கும் மக்கள் கூறுவதற்கும் மதிப்பளித்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனத்தை இழந்த தேசியப் பட்டியலில் மூலம் வந்த பிரதமருக்கு வீடி செல்லுமாறு நாம் கூற விரும்புகின்றோம்.

அதேபோல் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து குறுகிய காலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக நாட்டு மக்கள் கோரும் சில முக்கியப் பிரச்சினைகளை நிறைவேற்றி பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இணங்கி தேர்தலுக்காக மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்கள் ஆணையுடன் ஒரு புதிய அரசாங்கம் மலரும். அதற்கு முன், சர்வ கட்சி ஆட்சியை அமைத்து, வரிசைகளை அகற்ற தெளிவான திட்டம் இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுடன் எரிபொருள் கடன் சலுகை வரியை அமைத்தால், எண்ணெய் வரிசையை முடிவுக்கு கொண்டு வரலாம்.அந்த பணத்தை இப்போது செலவழித்து, 250 மில்லியன் டொலர்களை அத்தியாவசிய உணவு, எரிவாயு மற்றும் உரங்களை கொண்டு வரந்து, வரிசைகளை அகற்றி, நாட்டின் பொருளாதார நிலைக்கு ஓரளவு ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்து உற்பத்தியை பலப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்தப் போராட்டத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமானால், பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும், அரசியலமைப்புச் சட்டப்படி புதிய பிரதமரை நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும், இதற்கு ஐக்கிய மக்கள் தயாராகவுள்ளது.

ஜனாதிபதி வெளியேறுவதாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தொடர்பாக எந்த நம்பகமும் இல்லை.எனவே ஜனாதிபதியின் தனது இராஜினாமாவை பாராளுமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ தெரிவிக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அவர் சபாநாயகரிடம் வாய்மொழியாக முன்வைத்திருக்கிறார், ஆனால் அது எழுத்துப்பூர்வமாக பெறப்பட வேண்டும்.

போலியான கட்சித் தலைவர் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் முயல்கிறார், கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அவருக்கு உரிமை இல்லை. கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு அவர் அழைப்பு விடுத்து, ஜனாதிபதி இதனை என்னிடம் கூறியதாகவும் அதை என்னிடம் கூறியதாகவும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டு மக்கள் கூறுவது அவருக்குப் புரியவில்லை. 1% கும்பல் மட்டுமே ஏற்றுக்கொள்கிறது, வேறு யாரும் அவரை ஏற்கவில்லை.அவருக்கு மக்கள் ஆணையும் இல்லை, பிரதமர் பதவியில் தங்குவதற்கான உரிமையும் இல்லை, அவர் ஒரு மோசடி மட்டுமே செய்கிறார், அவர் இன்னும் பாடம் கற்கவில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு நாம் தயாராக உள்ளோம், அது தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி வருகின்றோம். போராட்டத்தில் இருந்து வரும் தற்காலிக அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்,எதிர்கட்சியின் பிரதானி சஜித் பிரேமதாஸ, எது செய்யப்பட வேண்டுமே அவை செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.