Header Ads



ஆடையின்றி பேசிய வீரவன்ச, தனது அடியாட்களுக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுக்க முயலுவதாக குற்றச்சாட்டு


பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்றைய(28) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

நேற்று -27-  பாராளுமன்றத்தில் அவசர கால நிலை பிரகடனத்திற்கு சார்பாக வாக்களித்தவர்கள் இந்நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கைதூக்கியவர்களாகும்.ஜனநாயகத்தை குழிதோன்டி புதைக்க 120 பேர் கைதூக்கினர். பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டாம்,மக்களின் இயல்பு வாழ்வை சீரழிக்க வேண்டாம் என்றும் ஜனநாயக விரோத சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று 63 பேர் வாக்களித்தனர். இந்நாட்டு மக்களுக்கு 120 மற்றும் 63 வாக்குகள் குறித்து ஒரு நல்ல புரிதல் உண்டு.

நேற்று முழுவதும் நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் தாங்கள் இழந்த விடயங்கள், தாம் அடைந்த அசௌகரியங்கள் மற்றும் இழப்புகள், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார அழிவுகள் பற்றியே பேசினர்.அமைச்சர்கள் தங்கள் பொறுப்பை மறுத்து பேசினர். நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள் தாங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதை மறந்துவிட்டனர்.நேற்று அதை நிதர்சனமாக கண்டோம்.

அவர்களின் சொத்துக்கள் சேதமடையும் போது வேதனையுடன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்களுக்கு இன்று மக்கள் இருக்கும் இடம்,மாதக்கணக்காக அவர்கள் எதிர்தோக்கும் இன்னல்கள், அவர்கள் பக்கம் உங்களை விட பிரச்சினைகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ளாதுள்ளனர். மக்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களால் இன்று உண்பதற்கும் குடிப்பதற்கும் வழியில்லாத நிலையை மக்கள் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் எண்ணெய் வரிசையில் மக்கள் இறக்கின்றனர்.அதுமட்டுமின்றி, மக்கள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவற்றில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல பாராளுமன்றம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை.எனவே இன்று 225 பேரையும் வேண்டாம் என்று மக்கள் கூறிய கருத்து உண்மை என்பது நேற்று பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் கூறும் விடயங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் ஜூலை 9ஆம் திகதி போன்ற நாட்கள் இன்னும் கிட்டிய நாட்களில் வரும், மக்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாது, மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்னோக்கி வருவதை தடுக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு சனத் நிஷாந்த மக்கள் குறித்து இடர்ப்பாடியதையும் வீதிக்கு இறங்கியதையும் பற்றி கூறியதற்கு,அவரின் தலைவிதியை மக்கள் கவனமாக வாசிப்பாளர்கள் என சனத் நிஷாந்த நினைவில் கொள்ள வேண்டும்.இந்நாட்டு மக்கள் கோழையர்கள் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினார்.

இன்று நாடு ஒரு மோசமான பாதையில் பின்னோக்கி சென்றுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்நாட்டு மக்களின் கருத்துக்களை வெளியிடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் பிரச்சினைகளை வீதியில் இறங்கி உரக்கக் குரல் எழுப்பும் உரிமையை பறித்துள்ளனர்.அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக,அவர்களின் சொத்தைக்களின் பாதுகாப்பிற்காக, அரசாங்கத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக,அரசாங்கத்தின் எதிர்கால இருப்பிற்காக, தற்போதைய ஜனாதிபதி முன்னோக்கிச் செல்ல முயற்சித்தால்,அவர் முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நம்பினால், மக்கள் அவருக்கு எதிராக வீதியில் இருங்குவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அவர்களுக்குள் ஒருமைப்பாட்டைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.இது பொதுஜன பெரமுனவின் அரசாங்கம்.பொதுஜன பெரமுனவின் தலைவர் இருக்கின்றார்.நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை இல்லை.ராஜபக்சவுக்கு மீண்டும் வலுவூட்டும் வகையில்,பசில் ராஜபக்ச பின்னால் இருந்த வன்னம் இந்த ஆட்டம் நடக்கிறது.இந்த நாட்டு மக்கள் பதில் சொல்லாமல் சண்டிபத்தை சகித்துக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.மக்கள் இந்த நேரத்தில் சிக்கலில் உள்ளனர்.ஏனெனில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களால் கிராமத்திற்குச் சென்று கிராமத்தின் பிரச்சினையை அடையாளம் கண்டு ஊர் மக்களுடன் பேச முடியாது.இன்று எம்மால் கிராமத்திற்குச் செல்லலாம்.வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால், இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், தயவு செய்து கற்பனை உலகில் இருந்து இறங்கி,நடைமுறைக்கு இறங்கி, என்ன என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். உங்கள் கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்கு மேல் இதற்கு தீர்வு இல்லை.

சர்வதேச சமூகம் இந்த நாட்டுக்கு உதவக் காத்திருக்கிறது.சர்வதிகாத்தால் உதவி பெற முடியாது.சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திகதி கூட இன்னும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியம் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்றளவில் சாதகமான சமிஞ்சைகள் இல்லை. இது ஒரு வக்கிரத்தனமான அரசாங்கம், இந்த பாராளுமன்றம் தனது மக்கள் ஆணையை இழந்துள்ளது. அரசமைப்பு பேரவை என்ற போர்வையில் மக்கள் ஆணையை திரிபுபடுத்த முற்பட்டால் அழுத்தத்தின் ஊடாக மக்கள் இனியும் பொறுக்க மாட்டார்கள் என்பதோடு அதற்கான பதிலையும். கிட்டய காலத்தில் வழங்குவார்கள்.

நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிரயோகித்து மக்களை அடக்கி, உருவாக்கப்படும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்க்கட்சியாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்குவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையில் நாங்கள் தயாராக உள்ளோம்.

விமல் போன்ற அரசியல்வாதிகள்,இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை அழித்த லாயக்கற்ற அரசியல்வாதிகளை இனிமேலாவது அரசியல் ஆடும் அரசியல்வாதிகளை தூக்கி எறிய மனம் வரவேண்டும்.விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் ஆடையின்றி பேசினார். ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெறுவதற்கான முதல் அடியையே நேற்றைய பேச்சில் முன்வைத்தார்.அதேபோல் தனது அடியாட்களுக்கு சில இராஜாங்க அமைச்சர்களைப் பெற்றுக்கொடுக்கவே முனைகிறார்.விமல் வீரவன்ச போன்றவர்களின் இரட்டை வேடங்களையும் சந்தர்ப்பவாதங்களையும் நன்றாக புரிந்து கொள்ளுமாறு கூறுகிறோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.