Header Ads



ரணிலை நாம் எதிர்ப்பது, சரியென தற்போது புரிந்திருக்கும் - சுமந்திரன்


ரணில் விக்கிரமசிங்கவை நாம் தெரிவு செய்யாதமையும்,  அவரது வெற்றியை தடுக்க நாம் எடுத்த தீர்மானம் சரியானது என்பதும் எம்மை விமர்சித்தவர்களுக்கு  இப்போது புரிந்திருக்கும். பதவியேற்றவுடன் அவரது அதிகார பலத்தை ரணில் வெளிப்படுத்தி விட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அறிவிக்கப்பட்ட வேளையில் அதனை நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றைய வேட்பாளரான டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்தது. 

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் காணப்பட்ட போதிலும், கட்சியின் தீர்மானம் குறித்து  கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமாணம் செய்த அன்றைய இரவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார். 

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஜனநாயக போராட்டம் நியாயமானது,  அதேபோல் தாம் கைப்பற்றிய அரச உடைமைகளை மீளவும் விட்டுச்செல்லவும் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் அவர்களை அமைதியாக போராட விட்டிருந்தாள் அமைதியாக நேற்றைய தினம் சென்றிருப்பார்கள். ஆனால்  நள்ளிரவில் அவர்கள் மீது பாதுகாப்புப்படை மிக மோசமான தாக்குதலை நடத்தியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். 

நாம் ஆரம்பத்தில் இருந்தே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பிரதான எதிர்க்கட்சி, சுயாதீன அணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஏனைய தமிழ்  முஸ்லீம்  கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் அமைப்பதுவே நெருக்கடிக்கு தீர்வு என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனால் மறுபுறம் ரணில் விக்கிரமசிங்க வெறுமனே மொட்டு கட்சியின் வேட்பாளராக வந்தவர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாகவே இன்று அக்கட்சி மாறியுள்ளது. அவர்களின் ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாது ராஜபக் ஷர்களின் எவரும் அமைச்சரவையிலும் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மக்கள் எடுத்துள்ளனர்.

அவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது மக்கள் ஆணை அல்ல.  எனவே தான் நாம் சரியான தீர்மானம் எடுத்தோம்.  நிறைவேற்று அதிகாரத்தை கைப்பற்றிய 24 மணித்தியாலங்களில் ரணில் தனது இயல்பை வெளிப்படுத்திவிட்டார். ஆகவே அவரை ஆதரிக்காதமைக்கான காரணம் என்ன என்பது விரைவிலேயே வெளிப்பட்டுள்ளது என்றார்.

- ஆர்.யசி -



2 comments:

  1. ஜனாதிபதி மாளிகையை யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாமா சுமந்திரன் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. Before that you should see the reasons motivated the public to do so....?

      Delete

Powered by Blogger.