Header Ads



ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணிலின், ஊழல் தொடர்பில் விசாரிக்க வேண்டும்


புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.  

1977ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்து ஊழல்கள் நிறைந்த ராஜபக்சர்களை காப்பாற்றியதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியள்ளார்.

விக்ரமசிங்க என்பவர் ராஜபக்ஷ க்ளோன் என்பதனை தவிர வேறு ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது என பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. It is quite true if you still claim that Ranil is nothing but a clone of Rajapakshe and needs a through investigation to verify the fact that Ranil has been protecting Rajapaksha family, and his bank accounts should be checked, you have all the rights and privileges to file a suit at the international court to prove otherwise.

    ReplyDelete

Powered by Blogger.