Header Ads



பாராளுமன்ற கட்சிகளிடையே இரகசிய கலந்துரையாடல்கள்


நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகள் சில இரகசிய கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடியதுடன்,  இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர் சந்திப்பின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுன இன்னும் பல்வேறு அரசியல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக எமது செய்திப் பிரிவு வினவிய போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் இன்று இரவு அவர்களுக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில் மீண்டுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன், இன்று 43 ஆவது படையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று கூடியுள்ளது.

No comments

Powered by Blogger.