Header Ads



ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையுடன் வெற்றி - பொதுஜன முன்னணி, UNP கூட்டுச்சேர்ந்தும் தோல்வி


ஐக்கிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

அக்மீமன பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் விஷேட நிகழ்வு என்னவென்றால் மொட்டு கட்சியான பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிட்டுள்ளன.

ஆனால், இத்தேர்தலில் 100 இடங்களில் 67 இடங்களை சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

அக்மீமன தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக விஜேபால ஹெட்டியாராச்சி பதவி வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.

காவியன்

No comments

Powered by Blogger.