Header Ads



சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் Dr ஷாபியின் வாழ்வை சிதைத்துவிட்டது


பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டதாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியிருந்தார்.

இதுதொடர்பாக Facebook ல் கருத்து வெளியிட்ட போதே முன்னாள் அரச தலவர் சந்திரிகா குமாரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,"வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் சம்பளத்தை அவர் இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கு முழுமையாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஷாபி தான் பணியாற்றிய குருநாகல் வைத்தியசாலைக்கு முழு சம்பளத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்!

பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டது.

வைத்தியர் ஷாபி மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு வைத்தியர் ஷாபி வழங்கியுள்ள பதிலிற்காக பாராட்டுக்கள்.

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபினை வணங்குகின்றார்கள்" எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.