Header Ads



படையினர் பொதுமக்களிடையே முறுகலை ஏற்படுத்த முயற்சி


விசுவமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம், பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் சீர்குலைக்க சில சந்தேக நபர்களின் திட்டமிட்ட முயற்சி என இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

 அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது போதையில் இருந்ததாக உறுதி செய்யப்பட்ட கும்பல் ஒன்று இராணுவத்தின் மீது கண்ணாடி போத்தல்கள் மற்றும் கற்களை வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட வேண்டியிருந்தது . மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முடிந்தது என இரணுவத்தினர் தெரிவித்துள்ளனர் . இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விஸ்வமடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.