Header Ads



கோட்டோ - ரணில் அரசை விரட்டுவோம், வரிசையில் நிற்பவர்களிடம் பிரச்சாரம்


- Ismathul Rahuman -

    நீர்கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக கிலோமீட்டர் கணக்கான  தூரம் நீண்ட வரிசையில் உள்ளவர்களை தெளிவுபடுத்தி கோட்டோ - ரணில் அரசை விரட்டுவோம் என நீர்கொழும்பு பிரஜைகள் கூட்டமைப்பினர் துண்டுப்பிரசுரம் விநியாகித்தனர். 

    ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், வரிசைகளில் அலக்கழிவதிலிருந்து மீழவும் கோட்டோ - ரணில் அரசை விரட்டுவோம். ஏப்ரல் 21 குண்டு தாக்குதலுக்கு இன்று 3வருடமும் 2 மாதம். அந்த மிலைச்சத் தாக்குதல் மூலம் தேசிய பாதுகாப்பை முன்நிறுத்தி அரசியல் இலாபம் பெற்றது கோட்டாபய என்பது பரகசியம்.

    இதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பேராயர் கார்தினல் மல்கம் ரன்ஜித் கோட்டாபயவிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை.

 ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்க, மைதிரிபால சிரிசேன, தேசபந்து தென்னகோன் போன்றவர்களுக்கு விரல் நீட்டுகின்றது.

  அவர்கள் இன்று நிம்மதியாக வழக்குமின்றி ஒன்றுமில்லாமல் இருக்கின்றனர்.. தாக்குதலின் சூத்திரதாரி யார் என்று எல்லோருக்கும் தெரியும். கோட்டாபயவிடம் கேட்டால் அவருக்கு ஒருநாளும் விடையளிக்க முடியாது.

  கோட்டா- ரணில் அரசை விரட்டும்வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆட்சிமுறை அமையும்வரை ராஜபக்ஷாக்கள் உட்பட அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தவற்றை திருப்பிப் பெறும் வரை போராட்டத்தை கைவிடக்கூடாது.

 மக்கள் உரிமையை பாதுகாக்கும் மக்கள் சட்ட மூலம் உறுவாகவேண்டும்.

 இவற்றை வெற்றிகொண்டு வாழ்வதற்குரிய சூழல் ஏற்படும் வரை கோட்டா கோ ஹோம் போராட்டத்தை பாதுகாத்து இறுதிவரை கைவிடாமல் ஒற்றுமையாக இருப்போம் என தெளிவுபடுத்தினர்.

No comments

Powered by Blogger.