Header Ads



தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்மாதிரி


(அஷ்ரப் ஏ சமத்)

தெஹிவளைச் சந்தியில் உள்ள  ஜூம்ஆப் பள்ளிவாசலின் பரிபலான சபையின் ஏற்பாட்டில் தெகிவளை  பிரதேசத்தில்  வாழும் 300 முஸ்லிம் ஆண்கள் பெண்களை  பள்ளிவாசலுக்கு வீட்டுத் தோட்ட கருந்தரங்கினை நடாத்தியது.    

இம்மக்கள் தத்தமது  வீடுகள், தொடா்மாடி வீடுகள், மொட்டை மாடிகளில்  தமக்கு அன்றாடம் தேவையான காய் கரி பழங்களை வீடுகளில்  எவ்வாறு பயிா்செய்கையை செய்தல்  என்பது பற்றி  தெஹிவளை விவசாய உத்தியோகத்திரினால் செய்முறையும் விரிவுரை வழங்கப்பட்டது.  


இந் நிகழ்வில்  300 மரக்கரி கன்றுகளும் , சேதனைப் பசலைப் பொதியும்  இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வினை  பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவா் கலீல் ஹாஜி உட்பட இத் திட்டத்தினை செயல்படுத்தும் சப்ரி ஹாஜியும் பள்ளிவாசல் பரிபாலனை சபை அங்கத்தவா்களும் கலந்து கொண்டனா்.



No comments

Powered by Blogger.