Header Ads



ஆயுட்காலம் அதிகரிக்க விசேட, ஆலோசனையை வழங்கும் வீரசேகர


எரிவாயுவிற்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்  உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

எரிவாயு போன்ற சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும், இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்கள் எனவும் தெரிவித்தார்.

சுத்தமான எரிசக்தி எரிபொருளைப் பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில் உள்ளவர்களின் ஆயுட்காலம் 80 மற்றும் 85 ஆண்டுகள். ஆனால் இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்களாகும்.

அதாவது இலங்கையில் உள்ள சில குறிகாட்டிகள் தெற்காசியாவில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன. விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர வீழ்ச்சிக்காக அல்ல என்பதை இது காட்டுகிறது.

இன்று விறகின் பயன்பாடு ஒரு பழங்குடி செயல்முறையாக குறைத்து மதிப்பிடப்பட்டாலும், 1800கள் வரை விறகு உலகின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக இருந்துள்ளது. 2020ல், உலகின் மொத்த ஆற்றல் நுகர்வில் 10 வீதம் விறகிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இனங்களுக்கிடையில் துவேசத்தைத் தூண்டி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களைத் தூண்டி கலவரம் ஏற்படுத்துவதில் இவன் வல்லவன்,இவனுடைய போடோவையும் செய்தியையும் வௌியிடுவதைத் தயவு செய்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.