Header Ads



வெளிநாடு செல்ல முயன்ற 91 பேர் கைது


புத்தளம் - மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 91 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் குழுவொன்று மாரவில காவல்துறையினருடன் இணைந்து நேற்று காலை மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டது. 

அதன்போது, கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர். 

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்தியொன்றையும் மகிழுந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். Hiru

No comments

Powered by Blogger.