Header Ads



மைத்திரிபாலவின் தீர்மானத்திற்கு எதிராக தற்காலிக வெற்றியை பதிவுசெய்த நிமல்


துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜூன் 20ஆம் திகதிவரை தடையுத்தரவு பிறப்பித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் பூர்ணிமா பரணகம, இன்று (07) கட்டளையிட்டடார்.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவை நீக்குவது அல்லது கட்சிக்குள் செயற்படவிடாமல் தடுப்பது ஆகிய செயற்பாடுகளை இடைநிறுத்தியே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல்  சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (07) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவது, நிர்வாக சபையின் மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவது மற்றும் தேர்தல் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவது அல்லது வேறு ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

அதற்கமையவே அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நிமல், கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக மேற்குறிப்பிட்ட மனுவை தாக்கல் செய்திருந்தார்.

No comments

Powered by Blogger.