Header Ads



அரபு நாடுகளிடம் உதவி கேட்டதை, மறைத்த ஜனாதிபதி செயலகம்


கொழும்பில் உள்ள  அரபு நாட்டுத் தூதுவர்களை நேற்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ அவசரமாக சந்தித்திருந்தார். 

சந்திப்பின் போது, இலங்கைக்கு உதவும்படி ஜனாதிபதி கொழும்பில் உள்ள, அரபு நாட்டுத் தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குறித்த செய்தியை, அரபு நாடுகளிடம் உதவி கோரினார் ஜனாதிபதி - கொழும்பில் உள்ள தூதுவர்களை அவசரமாக சந்தித்தார் - Jaffna Muslim புகைப்பட ஆதரங்களுடன் ஜப்னா முஸ்லிம் இணையம், உடனடியாகவே நேற்று வெள்ளிக்கிழமை பதிவேற்றியிருந்தது.

குறித்த சந்திப்பு நடந்து முடிந்து 24 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அதுபற்றிய எந்த தகவலையும் ஜனாதிபதி செயலகமோ, அதன் ஊடகப் பிரிவோ அல்லது அரசாங்கத் தகவல் திணைக்களமோ  இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

முந்திய நல்லாட்சிக் காலத்திலும், முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்தித்தாலோ அல்லது உதவிகள் கோரினாலோ அதுபற்றிய விபரங்களை, மைத்திரிபால சிறிசேனவும் அநேக சந்தர்ப்பங்களில், மறைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இலங்கையின் நிலைமைகளையும் குறிப்பாக சனாதிபதியின் போக்கையும் மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் இந்த தூதுவர்கள் இலங்கைக்கு தற்போதைய நிலைமையில் ஒரு சதமேனும் தருவதாக எந்த உறுதி மொழிகளும் வழங்கமாட்டார்கள் என்பது மட்டுமல்ல இந்த சந்திப்பு பற்றி அவர்களுடைய நாட்டு வௌிநாட்டு அமைச்சுகளுக்கும் தெரிவிக்கமாட்டார்கள் என்பதை இன்னும் இந்த சனாதிபதிக்கு விளங்காமல் இருப்பது தான் இந்த நாட்டு மக்களின் துர்ப்பாக்கியம் என்பதும் கோட்டாகோகம, மைய்னாகோகமவில் கோஷமிடும் இளைஞர்கள், யுவதிகளின் கோரிக்கையை விளங்கிக் கொள்ள குறைந்தளவாவது புத்தியில்லாத இந்த நபருக்கு யார் உதவி செய்வார்கள் என அந்த தூதுவர்கள் விசனம் தெரிவிப்பதாக கருத்துகள் பரவுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.