Header Ads



நபிகளாரின் அழகிய வரலாற்றை, மலாய் மொழியில் எழுதிய சகோதரி வபாத்தானார்


- Azeez Luthfullah -

நபிகளாரின் வரலாற்றை எழுதிய மங்கை இறைவனிடம் மீண்டார்.

நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதிய சகோதரி அஸ்மா ஹாஜி அப்துல் லதீஃப் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். 

மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் மலாய் மொழியில் நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதுகின்ற நற்பேறு பெற்றார். ஆசிரியை, எழுத்தாளர், அழைப்பாளர், பன்னூலாசிரியர் என்று வெவ்வேறு தளங்களில் முத்திரை பதித்தவர். 

Nazam Sirah Anbiya என்கிற பெயரில் மலாய் மொழியில் அவர் எழுதிய நூல் 2015-இல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நபிகளாரின் வரலாற்றின் ஊடே நபிகளாரின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை உள்ளங்கவர் வகையில் சுவையாக விவரித்திருந்தார் அவர். 

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள்வானாக! அவருடைய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக! அவருக்கு சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக! ஆமீன். 


No comments

Powered by Blogger.