Header Ads



சப்ரான் என்ற இளைஞரின் அழகிய செயற்பாடு - குவிகிறது பாராட்டு


இலங்கையிலுள்ள பொது கழிப்பறைகளை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவை போதியளவு சுகாதாரமான முறையில் இருப்பதில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

எனினும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பொது கழிப்பறை ஒன்றில் ஏற்பட்ட மாற்றம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த கழிப்பறையை அழகான இடமாக மாற்றிய இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சப்ரான் என அழைக்கப்படுகின்ற இளைஞன் ஒருவரின் முயற்சியால் பொது கழிப்பறை அலுவலக இடம் போன்று மாற்றப்பட்டுள்ளது.

புறக்கோட்டை, சாமஸ் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பொது கழிப்பறை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.

கதவுகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது அது முழுமையாக மாற்றமடைந்து அலுவலகம் போன்று காட்சியளிக்கிறது.

குறித்த இளைஞர் அதனை அலங்கரித்து சுத்தப்படுத்தி வைத்துள்ளார். அங்கு சென்ற பெண் ஒருவர் அதனை புகைப்படமாக எடுத்து சப்ரான் என்ற இளைஞனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சப்ரான் என்ற இளைஞனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புறக்கோட்டை என்பது கொழும்பின் முக்கிய பகுதியாகும்.

நாட்டின் நாலா பக்கமும் உள்ள பல இலட்சம் மக்கள் அன்றாடம் கொழும்பு வந்து செல்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொது கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

No comments

Powered by Blogger.