Header Ads



இன்க்ஷா அல்லாஹ், நீங்கள் சுவனத்தில் இருப்பீர்கள்


Dr.  Iyad Al-Qunaibi's  அவர்கள் ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் (Daee). ஜோர்தான் நாட்டை சேர்ந்தவர்.அரபு மக்களிடையே பிரபலமான ஓர் அழைப்பாளர். செய்க் இயாத் அல் குனைபியின் மகள் சாரா குனைபி ற்கு 13 வயதாக இருக்கும்போது ஜூன் 2019 இல் புற்றுநோயினால் காலமானார்.

- இன்னா லில்லாஹ்  வ இன்னா இலைஹி ராஜிஊன் -

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கே சொந்தம்,அவனிடமே மீளுவோம்’.

டாக்டர். இயாத் குனைபி, தனது மகளின் உலக வாழிவின் கடைசி நாள் பற்றி இப்படி கூறினார்;

"கடைசி நாள் காலையில் அவள் என்னிடம்  ‘அப்பா, நான் இறந்துவிடப் போகிறேன்’ என்றாள்.

இதைக்கேட்ட நான் அவளிடம்; 

‘அருமை மகளே, இந்த கேள்விற்கான பதிலை நானோ, இங்கிருக்கும் செவிலியர்களோ அல்லது  உலகில் யார் எவருமோ அறியமாட்டார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மரணத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் என்னை விட இறைவனுக்கு அருகில் இருப்பீர்கள்’. என்று சொன்னேன்."

"பகல் பொழுதில் அவள் என்னிடம் மீண்டும் பேசினாள்;

 ‘அப்பா, சொர்க்கத்தையும் அதன் இனிமையையும் பற்றிய வசனங்களை எனக்கு ஓதிக்காட்டுங்கள்’ என்றாள். அவள் மரணத்தை வரவேற்க அதன் யோசனைக்கு அடிபணியத் தொடங்குகிறாள் என்று நான் உணர்ந்து கொண்டேன், அவளுக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று எனக்குத் புரிந்தது."

 "அவளுடைய மரணத்தின் போது,  என் இதயத்தில் ஒரு பனிக்கட்டி விழுந்தது போல்  நான் நிம்மதியடைந்தேன்.  அவள் அந்த உயர்ந்த இறைவிசுவாசத்தோடு  இறந்துவிட்டாள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் நான் அவளைப் பற்றி சான்று பகர்கின்றேன். நான் இறைவனை சந்திப்பதற்காக அவளை விரும்பினேன்."

 "எனதருமை மகளே உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், இன்க்ஷா அல்லாஹ், நீங்கள் சுவனத்தில் இருப்பீர்கள்."

"கண்கள் கண்ணீரை சிந்துகின்றது. இதயம் பிரிவின் வலியால் துடிக்கின்றது, ஆனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் சொல்வதற்கில்லை. உலகங்களின் ஆரம்பமும் முடிவுமான இரட்சகனான அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்"

"ஒ...சாரா சுவனம் எங்களது சேருமிடமாக இருக்கட்டும்"

‘யா அல்லாஹ், நாங்கள் உன்னிடத்தில் ஒரு நல்ல முடிவைக் கேட்கிறோம்’

AKBAR  RAFEEK

1 comment:

  1. இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் -

    நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கே சொந்தம்,அவனிடமே மீளுவோம்’.

    ReplyDelete

Powered by Blogger.