Header Ads



அமெரிக்காவில் சவூதி தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு ஜமால் கசோக்கியின் பெயர்


சவூதி முகவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பெயர் வொஷிங்டன் டி.சியில் சவூதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கொலை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியின் நினைவை மறைக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காகவே கசோக்கியின் பெயர் சூட்டப்பட்டதாக அமெரிக்கத் தலைநகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கொலைக்கு சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுப் பிரிவு முடிவுக்கு வந்தது. எனினும் இதனை அவர் மறுத்தார். அடுத்த மாதம் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை முதல் முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

புதிய ஹம்ஸ்பெயர் ஒழுங்கையில் இருக்கும் சவூதி தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கான புதிய பெயர் மாற்ற பலகையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தன்பூல் நகரில் உள்ள துணைத் தூதரகத்திற்குள் வைத்தே கசோக்கி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.