Header Ads



இன்றைய நாட்டின் தலைவிதிக்கு, போலியான தேசப்பற்றும் ஒரு காரணமாகும் - சஜித்


 ராஜபக்ஸ கள்ளக்கூட்டத்துடன் இணைந்து அரசாங்கம் அமைக்க முடியுமா?  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி எழுப்பினார்.

பொறுப்பேற்குமாறு சிலர் கேட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது தானோ பொறுப்புகளை ஒருபோதும் தட்டிக்கழிக்கவில்லை எனவும் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மொட்டு கள்ளக்கூட்டம் மற்றும் ராஜபக்ஸக்களுடன் இணைந்து அரசாங்கங்களை அமைக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இன்று இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது ஒரு துளியளவும் நம்பிக்கை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதன் மூலம் இந்நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


இந்நாடு தொடர்ந்தும் மூடிய தன்மையுள்ள ஒரு நாடாக இருக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உலக நாடுகளுடன் தொடர்புகளை பேனும், உலக நாடுகளுக்கு நமது நாட்டை அனுகுவதற்கேற்க திறந்த தன்மை மற்றும் உலக நாடுகளுடன் நட்புறவுகளை பேனும் நாடாக மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தி சமீப நாட்களாக கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை தொடங்கியுள்ளதோடு,இதன் ஓர் அங்கமாக குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம தேர்தல் தொகுதிக்கூட்டம் இன்று (19) இடம்பெற்றது.


பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் பிரதி அமைச்சரும், மாவத்தகம தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான ஜே.சி.அலவத்துவலவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


வீதிகளில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு, பாடசாலையை தவறவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, எதிர்காலம் குறித்து விரக்தியடைந்துள்ள இளைஞர்களுக்கு, வழங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் தீர்வோ அல்லது அதற்கான ஓர் வேலைத்திட்டமோ இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த துன்பங்களை தாங்கிக் கொள்ளுமாறே மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.


குறைபாடுகள் மற்றும் இயலாமைகள் குறித்து கூற அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒரு புதிய மக்கள் ஆணையைத் தாண்டி இந்த கடுமையான நெருக்கடிக்கு தீர்வு இல்லை எனவும் தெரிவித்தார்.


இன்றைய நாட்டின் தலைவிதிக்கு போலியான தேசப்பற்றும் ஒரு காரணமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் உற்பத்தித் தொழிற்துறைகளை மேம்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்குப் பார்வை எனவும் அவர் தெரிவித்தார்.


தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதும்,சுற்றுலாத் துறையை ஊக்குவித்தலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த அவர்,திறமையான மற்றும் நிபுனத்துவமிக்க தொழிலாளர் படையை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.