Header Ads



இலங்கை இயல்பு நிலைக்கு திரும்ப பாகிஸ்தானின் பிரார்த்தனை


தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை இலங்கைக்கு வழங்க தமது அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற உமர் பாரூக் புர்க்கி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியனவற்றை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை நாட்டிற்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி உயர்ஸ்தானிகரிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.