Header Ads



நாட்டில் ஒருபோதும் பஞ்சம் ஏற்படாது, மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை


நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படுகிறது.

எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.

நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன் 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளது. எனவே நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆம் உமக்கு ஒருபோதும் பஞ்சம் வரமாட்டாது. பொதுமக்களின் சொத்துக்களைப் பதுக்கி வௌிநாடுகளில் கள்ளத்தனமாக முதலீடு செய்துள்ள மந்தி(ரி)களுக்கு பஞ்சம் ஒரு போதும் வரமாட்டா. ஆனால் பசியால் கதறும் பிள்ளைகளுக்கு உணவு வழங்க வசதியின்றி பிள்ளைகளை களனி ஆற்றில் போடும் செய்தி உமது காதுகளுக்கு ஒரு போதும் கிட்டாது. பெற்றோல் வரிசையில் காத்துக்கிடந்த தந்தை மரணிக்கும் போது கதறியழும் மகனின் அவலக்குரல் உமது காதுகளுக்கு ஒரு போதும் கேட்காது. தயவுசெய்து வீண் வம்பளக்காமல் பொதுமக்களை ஏமாற்றுவதை நிறுத்தி பதவியைப் போட்டு விட்டு ஓடும் விவசாய மந்திரி பதவியை மிகவும் சிறப்பாக செய்யும் திறமையாளர்கள் எமது நாட்டில் இருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.