Header Ads

எப்போது பதவியேற்கிறார் தம்மிக்க..?


வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் நாடாளுமன்றம் கூடாத நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். நாடாளுமன்றம் அடுத்த வாரம் ஜூன் 21, 22, 23 மற்றும் 24ம் திகதிகளில் கூடவுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் ஜூன் 21ம் திகதிக்கு முன்னர் அவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TW

No comments

Powered by Blogger.