Header Ads



தற்போதைய நெருக்கடியில் பங்களாதேஷ் வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு - உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்


இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம் (Tareq Ariful Islam) தெரிவித்துள்ளார்.

இன்று (23) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022 இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 50 ஆண்டு பூர்த்தியாகிறது. இந்த காலகட்டத்தில், இரு அரசாங்கங்களும் மிகவும் நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயற்பட முடிந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பங்களாதேஷ் வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், தற்போதைய நிலைமையை இலங்கையால் விரைவாக வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

23.06.2022


No comments

Powered by Blogger.