Header Ads



வெடிப்பு ஆரம்பம்..?


அரசாங்கத்தில் இருந்து பிரிந்த சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இடம்பெற்று வருவதுடன் அக்குழுவின் தலைமைத்துவம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, சுயேட்சைக் குழுவின் தலைவராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் விமல் வீரவன்சவும் பிரதமர் வேட்பாளராக வரலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமல் வீரவன்சவின் தலைமைத்துவ யோசனையை குழுவின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். தலைவர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது எம்முடன் இருக்கும் அரசியல் கட்சிகளில் தலைவர் விமல் வீரவன்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், டலஸ் அழகப்பெரும தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், டளஸ் புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் மக்களின் அரசியல் நாடித்துடிப்பைப் பிடிக்கக்கூடிய சில நல்லவர்களில் டலஸ் ஒருவர் என்றும் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு மாபெரும் வல்லுநர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிக்கித் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கும் திறன் டலஸ் அழகப்பெருமவுக்கு உண்டு எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.