Header Ads



ஸ்மார்ட் போன்களால், தலைக்கனம் கூடுகிறது - விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா..?


பெயர்: டெக் நெக். (வயது: 12 )

தோற்றம்: மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.

ஆஹா நாம் விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா?

சரி என்ன மற்றம் நடக்கப்போகிறது எப்படி நடக்கப் போகிறது என தெரிந்து கொள்வோம்.

நம் கைகளில் இருக்கும் உங்கள் ஸ்மாட் போன் தான் இந்த மாற்றத்திற்கு காரணமாகப் போகிறது. அவுஸ்திரேலிய சிரோபிராக்டர்ஸ் அசோசியேஷன் நாம் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால், நமது உடல் வடிவம் மாறுகிறது என்று கூறுகிறது.

மொபைல் போன், லப்டப் போன்ற சாதனங்களை, அதீத ஈடுபாட்டுடன் பயன்படுத்தும் போது, கழுத்து முன் பக்கமாக குனிந்தே இருக்கிறது. கழுத்து நேராக இருக்கும் நிலையில், தலையின் எடை, 5 கிலோவாக இருக்கும். முன்பக்கமாக, 30 பாகை கோணத்தில் குனிந்தால், தலையின் எடை, 18 கிலோவாக அதிகரிக்கும்.

இதுவே, 60 பாகை குனிந்தால், தலையின் பாரம், 27 கிலோ! ஒரு குழந்தையை துாக்கி தோளில் வைத்துக் கொண்டால் இருக்கும் கனம் இது.

​​​​ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் நாம் இப்படி பாரம் சுமப்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இதனால் ஏற்படும் பாதிப்பு டெக் நெக் அல்லது ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கு 12 வயதுதான் ஆகிறது என்று சொன்னீர்கள். தொலைபேசிகள் அதை விட பழையவை என்ற கேள்வி எழலாம். கைத்தொலைபேசிகள் நீண்ட காலம் பாவிக்கப்பட்டு வந்தாலும் 2011 இல் “டெக்ஸ்ட் நெக்” ஒரு நோயாக அடையாளம் காணப்பட்டது, இப்படி தலை குனிந்தே இருந்தால் மேனியா உடல் அமைப்பில் எதிர் காலத்தில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்தே இருப்பது, முதுகுத் தண்டில், அழுத்தத்தை ஏற்படுத்தும் மேலும் கழுத்தும் முன்பக்கமாக குனிந்தே இருப்பதால், பிரச்சினை இன்னும் அதிகமாகிறது. இது தவிர, தோள்பட்டை வலி, விரல்கள் மரத்துப் போவது, தலைவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

கழுத்து, முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி உட்கார்ந்து, கண்களுக்கு நேர்கோட்டில், மின் தொடர்பு சாதனங்களை வைத்து பயன்படுத்த வேண்டும். கழுத்திற்கான பிரத்யேக பயிற்சிகளை தினமும் செய்வது, பிரச்னைகளை பெரிதாக்காமல் பாதுகாக்கும்.

No comments

Powered by Blogger.