Header Ads



ஐரோப்பா முழுவதும் வரவுள்ள, பொதுவான 'சார்ஜர்'




ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் பொதுவான கையடக்கத் தொலைபேசி சார்ஜரை பயன்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கம் யூ.எஸ்.பி டைப்–சி (USB Type C) சார்ஜர் மாத்திரமே அந்த நாடுகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இலத்திரன் கழிவுகளை குறைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவினால் அப்பிள் நிறுவனம் ஐபோன்களில் சார்ஜர் மற்றும் கனெக்டெர் பின்னை மாற்றி வடிவமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மடிக்கணினிகளுக்கும் பொதுவான சார்ஜர் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் அனைத்து கைபேசிகள், டப்ளட்டுகள், கெமராக்கள் ஆகியவற்றில் அண்ட்ரொய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி-டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் 250 மில்லியன் டொலர் வரையான அனாவசியமான சார்ஜர் செலவுகள் சேமிக்கப்பதோடு, வருடாந்தம் குவியும் 11,000 தொன் கழிவுகளை இதன் மூலம் குறைக்க முடியுமென, ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.