Header Ads



29 கோழிக் குஞ்சுகளை பராமரிக்க 20 பணியாளர்கள் - இலங்கையில் உலக மகா ஆச்சரியம்


விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம் மற்றும் மாகாண விவசாய அமைச்சுக்கள் என்பவற்றில் பணிகள் சரியாக நடைப்பெறாமல் “வெள்ளை யானை” போன்றுள்ளது என விவசாய தொழிற்சங்க ஒன்றிணைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்..

பொரளை N.M.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாட்டில் விவசாய அமைச்சு, மற்றும் உற்பத்தி துறையில் பணியாற்ற ஆயிரம்  பணியாளர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை செய்யாமல் அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெற்று வருகின்றனர்.

விவசாய பணிப்பாளர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் அவர்களது சொந்தங்கள், உறவினர்களே அவ் எரிபொருள் சலுகையை அனுபவித்து பயணிக்கின்றனர்.

விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான பிந்துனுவெவ பண்ணையில் 30 ஏக்கர் காணப்பட்ட போதிலும் 29 கோழிக்குஞ்சுகள் மாத்திரமே வளர்க்கப்படுகிறது. இதை பராமரிக்க சுமார் 20 பணியாளர்கள் பணிபுரிகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.