Header Ads



இலங்கைக்கு உதவுவது எமது கடமை, நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறோம் - IMF


தமது நிதியக் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ தாம் கடமைப்பட்டுள்ளதாக IMF அறிவித்துள்ளது

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது கொள்கை கலந்துரையாடல்களுக்கு தயாராகும் வகையில், இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை தொடரவுள்ளதாக IMF அறிவித்துள்ளது

இதன் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு முழுமையாக தயாராக வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

தமது நிதியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பதற்றங்கள் , வன்முறைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் IMF  கூறியுள்ளது.

முன்னதாக அமெரிக்கா சென்று அப்போது நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரி IMF தரப்புடன் முக்கிய பேச்சுக்களில் பங்கேற்றிருந்தார். எனினும் நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையினால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.


No comments

Powered by Blogger.