Header Ads



சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்றவர், நுவரெலியாவில் இருந்து காலிமுகத் திடலுக்கு நடைபயணம்


(செ.திவாகரன்)

சர்வதேச மெய்வலுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற நடை வீரரான உடப்புசல்லாவை மணிவேல் சத்தியசீலன் நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ராகலை முருகன் ஆலயத்தில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா,  ஹட்டன் , கினிகத்தனை , அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள ‘கோட்டா கோ கம’ வை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார்.

இவரின் நடைபயணத்தின் போது பிரதான நகரங்களில் அமோக வரவேற்பு வழங்கி இவரை உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

இந்நடைபயணத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஹட்டனிலிருந்து அவிசாவளை வரை சென்று  நேற்று திங்களன்று  மாலை 5 :10  மணியளவில்  நடைபயணமாக கொழும்பு காலிமுகத்திடலுக்குச் சென்று எதிர்ப்பை வெளிக்காட்டி வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.