Header Ads



பசில் மீது, குறிவைத்தார் நீதி அமைச்சர்


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் இரத்து செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பசில் ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையும் நீக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.